கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் ஹீரோ..! வலிமை மோஷன் போஸ்டர் படைத்த புதிய சாதனை..!
வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியான இரண்டே நாளில் யூடிபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியான இரண்டே நாளில் யூடிபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் லிமை படத்தில் உள்ள புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் அஜித் பில்லா கெட்டப் போல் இருப்பதால் இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இன்னும் வலிமை திரைபடதின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#ValimaiMotionPoster has crossed 10 million+ views on YouTube https://t.co/dpwc4dqFFC#Valimai Power is the state of Mind
#Ajithkumar @BoneyKapoor #HVinoth @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi pic.twitter.com/YZCguiE9DM— Done Channel (@DoneChannel1) July 13, 2021