கோவையில் உள்ள பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்தை திருடி, போதை ஊசிக்காக விற்ற 5 பேர் கைது!

Default Image

போலீசார்,கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்தை திருடி, போதை ஊசிக்காக விற்பனை செய்து வந்த 5 பேரை  கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் மாயமாகியுள்ளன. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் மயக்க மருந்து மாயம் குறித்து போலீசாருக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலையில் காந்திபுரம் ஆர்.வி. உணவகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த அப்துல்ரகுமான் என்பவனை பிடித்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு மருத்துவமனைகளில் நண்பர்களுடன் சேர்ந்து மயக்க மருந்துகளை திருடி, அதனை திரவ குளுக்கோஸுடன் கலந்து போதை ஊசியாக பயன்படுத்தி வந்ததை ஒப்புக் கொண்டான். மேலும் இந்த போதை ஊசியை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் அவன் கூறியுள்ளான்.

அப்துல்ரகுமான் அளித்த தகவலின் பேரில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த மகேந்திரன், அஜய், அசோக் மற்றும் ரோகித் ஆகியோரைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மயக்கமருந்துகளைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 5 பேரும் பெங்களூரூவில் இருந்து போதை மருந்துகளை வாங்கிவந்து பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்