“பீஸ்ட்”ஆடியோ லாஞ்ச் மேடையில் தளபதி விஜய் என்ன பேச போகிறார்?

“பீஸ்ட்”ஆடியோ லாஞ்ச் மேடையில் தளபதி விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது. 

நடிகர் விஜய் அண்மைகாலமாக தனது பட ஆடியோ வெளியிட்டு விழாவில், தன் மனதிற்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை அவ்வப்போது நடக்கும் சமூக நிகழ்வுகளையும், சுட்டிக்காட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவில், சர்க்கார் ப வெளியிட்டின் போது, அவரது ரசிகர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை குறித்து ” என் பேனரை கிழியுங்கள் எனது ரசிகர்கள் மேல் மட்டும் கை வைக்காதிங்க” என்பது போல பேசியிருந்தார். அதைபோல் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பல்வேறு மேடைகளில் கூறிவருகிறார்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் நேற்று ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தற்போது நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட் “என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட இறுதிக்குள் பீஸ்ட் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் வழக்கம் போல தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பேசுகையில், தனது கார் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் பற்றி பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.