இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு தொற்று உறுதி…! மீண்டும் குறைந்தது உயிரிழப்பு எண்ணிக்கை…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 624 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,09,46,074 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 5,886 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,09,46,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 624 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,11,408 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,000 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,04,720 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,29,946 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 38,76,97,935 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,கடந்த 24 மணி நேரத்தில் 37,14,441 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.