#BREAKING: ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!
ஏ.கே.ராஜன் குழு அமைத்ததில் எந்த சட்ட விதி மீறல்களும் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும். ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. குழு அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை வீண் செலவாக கருத முடியாது. கருத்துகளை கேட்க குழு அமைத்ததில் என்ன தவறு..? என்று கூறி கரு. நாகராஜன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.