தமிழ் சினிமா நடிகர்களால் நான் தெலுங்கு பக்கமே போகிறேன் பிரபல தயாரிப்பாளர் விரக்தி !

Default Image

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நடந்த வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக் ஒரு வழியாக பல மாற்றங்களுடன் முடிவுக்கு வந்தது. வரும் வாரம் முதல் பழையபடி படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மே 9ம் வெளிவரவுள்ள ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’. அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.

இப்படத்தின் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றுது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தமிழ் சினிமா நடிகர்களால் நான் தெலுங்கு பக்கமே போகிறேன் என்று விரக்தியாக பேசினார்.

அவர் பேசுகையில், தெலுங்கு இன்டஸ்ட்ரிகிட்ட இருந்து நாம கத்துக்கவேண்டியது நிறையவே இருக்கு. சின்னச்சின்ன விஷயங்களைச் சரி செஞ்சாச்சு. ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழ்ல 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குன்னா, 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. ஆனா, தெலுங்குல 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும்.

அந்த புரிதல் தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நிறையவே இருக்கு. அதனாலேயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்‌ஷமா இருக்கு. தமிழ்ல அப்படி இல்லை. சுயநலமா நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. போன மீட்டிங்ல கார்த்தி பேசுன மாதிரி, வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும்.

மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது. எல்லோரும் தயாரிப்பாளர் நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் மாறணும். நான் ஏற்கெனவே அங்க ஒரு ஆபீஸ் வாங்கிட்டேன். தமிழுக்கு டாடா சொல்லிட்டு போய்டலாம் இருக்கேன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்