தடுப்பூசி போடவில்லையெனில் வேலை கிடையாது-பிஜி அரசு..!
கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் வேலை கிடையாது என பிஜி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா உலக நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நாட்டுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதில் நாடுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் தடுப்பூசி போடுவதற்காக ஒரு முடிவை அறிவித்துள்ளனர். பிஜி தீவில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் வேலை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பிராங் பைனிமராமா, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அரசு பணியில் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். மேலும், நவம்பர் 1-ஆம் தேதிக்குள் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும். அப்படி இல்லையெனில், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.