300 யூனிட் மின்சாரம் இலவசம்;பழைய மின்சார கட்டணங்கள் தள்ளுபடி – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி…!

Default Image

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூலை 11) உறுதியளித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கெஜ்ரிவால்,அம்மாநில மக்களுக்கு நான்கு வாக்குறுதிகளை அளித்தார்.அதன்படி,

  1. மின்சாரத்தைப் பொறுத்தவரை,எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
  2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும்.
  3. பழைய மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  4. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க சிறிது காலஅவகாசம் எடுக்கும், ஆனால் நாங்கள் அதை செய்வோம்”,என்று அறிவித்துள்ளார்.

மேலும்,”பாஜக தலைமையிலான உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 ஆண்டுகளாக முழுமையடையாத பணிகள் டெல்லியில் தமது ஆட்சியில் தற்போது நிறைவடைந்துள்ளன.2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக உத்தரகண்ட் முதல்வரை பாஜக அரசு மாற்றியுள்ளது.இதனால்,ஆளும் கட்சிக்கு முதல்வர் இல்லை. 70 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு கட்சி தனது முதல்வர் பயனற்றது என்று கூறியுள்ளது” என்று கெஜ்ரிவால் கூறினார்.

இதற்கு முன்னதாக,அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக கெஜ்ரிவால் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்