சிறப்பு தீர்மானம் – அதிமுகவின் 50 -ம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுதல்.!

Default Image

அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும், தீய சக்தியிடமிருந்து இந்த நாட்டையும், மக்களையும் காட்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களால் 16 லட்சம் தொண்டர்களோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.

இதன்பின் அம்மா அவர்களின் அயராத உழைப்பால் ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்ட மிகப் பெரிய இயக்கமாக, எஃகுக் கோட்டையாக தற்போது 50-வது ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டை சீரோடும், சிறப்போடும், எழுச்சியோடும் தமிழகம் மட்டுமல்லாமல், கழகம் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், பார் போற்றும் பெருவிழாவாக, மிக விமரிசையாக, மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை வழங்கிக் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்