பெண்களே…! இந்த 8 பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்…!

Default Image

பொதுவாக நாம் அனைவரும் சந்தையிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் புதிதாக இருப்பதற்காக இப்படி செய்யலாம். பல நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது தான். ஆனால் சில சமயங்களில் குளிர் சாதன பெட்டியில் சில உணவுகள் மற்றும் பானங்களை வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது.

தக்காளி

குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் பகுதிகளில் தக்காளி அல்லது காய்கறிகளை வைத்திருக்க வேண்டாம். பெண்கள் தக்காளி அல்லது காய்கறியை இரண்டு, மூன்று நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து இருப்பதால் அவை அதிக தண்ணீரைஉறிஞ்சுவது மட்டுமல்லாமல், சில சமயங்களில் தக்காளியை பூச்சியும் அரிக்கின்றது. இதனால், காய்கறிகளில் இருந்து கெட்ட வாசனையையும் வரத் தொடங்குகிறது இந்த விஷயத்தில் அவை கெட்டுப் போவது மட்டுமல்லாமல் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மற்ற விஷயங்களையும் கெட்டுப் போக செய்கிறது.

சோயா சாஸ்

நீங்கள் சோயா சாஸை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோயா சாஸ், தக்காளி கெட்ச்அப் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.

தர்பூசணி

வெட்டுவதற்கு முன் நீங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் வெட்டிய பின் அதைச் செய்யாதீர்கள். இந்த பழங்களில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை குளிர்சாதன பெட்டியில் வெட்டிய பின் வைக்கப்படும்போது கெட்டுவிடும்.

தேன்

தேனை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், தேனின் சுவை மற்றும் மணம் கேட்டு போகிறது. எனவே , தேனை சாதாரண வெப்பநிலையில் நேரடி சூரிய ஒளியில் வைக்கலாம்.

ஜாம்

ஜாமை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். ஜாமை பயன்படுத்திய பின்னரும், வெளியில் வைத்தால் கெட்டு போகாது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு வைத்தால், அதன் சுவை கேட்டு குறைந்து போவதோடு, சில சமயங்களில் கேட்டு போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எண்ணெய்

சில பெண்கள் சமையலறையில் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அது கெட்டியாகி உறைகிறது. எனவே எண்ணெயை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது.

எலுமிச்சை

சிட்ரிக் அமிலமான எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்