தமிழகத்திற்கு மாதம் 2 கோடி தடுப்பூசிகள் தேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், கட்டுமானம் மற்றும் ஆக்சிஜன் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் டயாலிசிஸ் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை ஆகியவை வீடு தேடி வந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும், தமிழகத்திற்கு மாதத்திற்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.