இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் அதர்வா..??

நடிகர் அதர்வா அடுத்தததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த  திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் நடிகர் அதர்வாவை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு தரமான கதையை எழுதியதாகவும், அந்த கதைக்கு நடிகர் அதர்வா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் கூறியுள்ளார். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.