சென்னையில் தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது !
காவல்துறையினர், சென்னையில் தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவரைக் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரசாந்த், அருண்குமார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மகாகவி பாரதியார் நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். 2கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரசாந்த் ஏற்கெனவே ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்.அருண்குமார் மீது 2 கொலைமுயற்சி வழக்குகளும் ஒரு வழிப்பறி வழக்கும் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.