Bone Death என்றால் என்ன..? எப்படி உருவாகிறது…? அறிகுறிகள் என்ன…?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மரணம் என்ற நோய் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலும்பு மரணம் என்ற நோய் ஏற்படுபவர்களுக்கு, இடுப்பு, மூட்டு மற்றும் தொடை எலும்புகளில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. எலும்பியல் துறை தலைவர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா, பி.டி இந்துஜா மற்றும் எம்.ஆர்.சி மும்பையின் டாக்டர் மயங்க் விஜயவர்ஜியா ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு செய்து, மருத்துவ ஆய்வறிக்கை எழுதியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இது கொரோனா வைரஸின் பக்கவிளைவு என தெரிவித்துள்ளனர்.
BONE DEATH என்றால் என்ன?
அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்று அழைக்கப்படும் எலும்பு மரண நோயானது, எலும்புக்கு இரத்த சப்ளை செய்வதை பாதிக்கிறது. மேலும், இது எலும்பின் செயல்திறனை மெதுவாக கொல்லக்கூடிய ஒரு நோய் ஆகும். இது எலும்பு மற்றும் எலும்பைச் சுற்றி நிறைய அமைப்பு இருப்பதால், இந்த நோயின் பாதிப்பு உடனடியாக அதன் தீவிரத்தை காட்டாது. மெது மெதுவாக தான் அதன் பாதிப்பை செயல்படுத்தும்.
உங்களுக்கு இடுப்பில் வலி வரும்போது, சம்பந்தப்பட்ட நபர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கோவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்ட நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு இடுப்பில் இந்த பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எலும்பு மரணம் நோய் இருப்பதை எவ்வாறு அடையாளம் காண்பது?
இந்த நோய்க்கு மருத்துவ ஆலோசனையை பெறுவதே சிறந்த வழி என்றும், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எலும்பு இறப்பை அடையாளம் காண வெற்று எக்ஸ்-ட்ரே எடுத்துக்கொள்வது மட்டும் போதாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிகிச்சை
இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது மூன்று மருத்துவர்களிடம் தான். இந்த நோயை ஆரம்பகால நிலையில், கண்டறிந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும். இல்லையென்றால், இது உடல் அளவில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இந்த நோய்க்கு முழுமையாக சிகிச்சையளிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகும். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது, 3 முதல் 6 வாரங்களில் இடுப்பு பகுதிகளில் உள்ள வலிகள் குறைந்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கும் கோவிட் -19 சிகிச்சையின் போது பரிந்துரைக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்து தான் பாதி அளவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.