தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக அமைச்சர் பொன்முடி நியமனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தியமைத்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறுப்பினர்களும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.