தலைவர் 169 படத்தின் இயக்குனர் யார்..?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Default Image

ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில், ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவர் அமெரிக்காவிற்கு சென்று  அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்.

அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று  ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளநிலையில், அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது, அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்