யூரோ கால்பந்து தொடரில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்..!
யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்திலும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி படத்தில் ஒரே ஒரே சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் வைத்து படமாக்கப்படவுள்ளது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில், யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்திலும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு பதாகை காட்டியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் வலிமை திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் தயாராகி விட்டதாகவும், வருகின்ற ஜீலை 15- ஆம் தேதி வெளியீடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.