புதிய கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது தந்தை எஸ் ராஜசேகர் ரெட்டி அவர்களின் பிறந்த தினமான இன்று ஆந்திராவில் புதிதாக கட்சி ஒன்று துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இன்று மாலை இந்த கட்சி துவக்க விழா நடைபெற உள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைவானவர்களே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் தாய் விஜயம்மாவும் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய ஷர்மிளா அவர்கள், தனது தந்தையின் பாதையில் தான் நடக்க விரும்புவதாகவும், அதனால் தான் அரசியலில் இறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025