சல்மான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட குற்றவழக்குகள் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!
இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வால்மீகி சமுதாயத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக தொடரப்பட்ட குற்றவழக்குகள் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Tiger Zinda Hai என்ற திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியின்போது, வால்மீகி சமுதாயத்தினர் குறித்து ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக சல்மான்கான் மீது புகார் எழுந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளுக்கு தடை விதிக்கக் கோரி சல்மான்கான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வால்மீகி சமுதாயத்தினரை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சல்மான்கான் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.