மாநாடு திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!
சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக வருகின்ற ஜூலை 9 – ம் தேதி வெள்ளிக்கிழமை முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் வைத்து சிறிய கட்சியை மட்டும் படமாக்கவுள்ளனர். இதனால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக வருகின்ற ஜூலை 9 – ம் தேதி வெள்ளிக்கிழமை முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை ஆயுத பூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.