புதிய டெல் இன்ஸ்பிரான் 15 5575 லேப்டாப் அறிமுகம்..!
டெல் நிறுவனம், அதிநவீன தொழில்நுட்ப கொண்ட டெல் இன்ஸ்பிரான் 15 5575 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது . பட்ஜெட் விலையில் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு டெல் வலைதளம் மூலம் இந்த சாதனத்தை மிக எளிமையாக வாங்க முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 15 5575 மாடல் பொறுத்தவரை 15.6-இன்ச் எச்டி மற்றும் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே மிகப் பெரியதாகவும் மற்றும் துல்லியமாகவும் இருப்பதால் இதில் மிகச் சிறந்த மல்டி மீடியா அனுபவத்தைப் பெறமுடியும். இந்த லேப்டாப் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் இதில் சவுண்ட் சிஸ்டமும் மிக சூப்பராக இருக்கிறது.
மிகவும் அதிகம் எதிர்பார்த AMD Ryzen 3 2200u வேகா3 கிராபிக்ஸ் மற்றும் AMD Ryzen 5 2500u செயலி வேகா5 கிராபிக்ஸ் ஆதரவுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனம்.
இந்த இன்ஸ்பிரான் லேப்டாப் பொறுத்தவரை என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1060 டிஸ்க்ரீட் ஜிபியு மற்றும் என்விடியா மேக்ஸ்-க்யு டிசைன் டெக்னாலஜி வடிமைப்புடன் வெளிவந்துள்ளது.
இக்கருவியில் பொதுவாக தண்டர்போல்ட்3, யுஎஸ்பி 3 போர்ட், யுஎஸ்பி 3.1, ஜெனரல் 2, டைப்-சி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் 4GB of DDR4 2400MHz RAM மற்றும் 8GB of DDR4 2400MHz RAMஆதரவைக் கொண்டுள்ளது.
ஸ்டூடியோ-தர ஒலி வழங்குவதற்கான மேம்பட்ட றுயஎநள ஆயஒஒயுரனழை ப்ரோ மென்பொருளய் தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது, அதன்பின்பு லேக்-ஃப்ரீ வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவத்துடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர் சினிமா அனுபவங்களைக் கொண்டுள்ளது இந்த டெல் இன்ஸ்பிரான் 15 5575 லேப்டாப் மாடல்.
மேலும் இந்த லேப்டாப்புகளை தூசுகள் தாக்காதவாறு அதற்கான தடுப்பு வசதியுடன் டெல் களமிறக்குகிறது.
டெல் இன்ஸ்பிரான் 15 5575 மாடல் பொதுவாக நீலம், வெள்ளை, பிளாட்டினம் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்க்பட்டள்ளது, அதன்பின்பு 7மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கும் தன்மைக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல். டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனம் 2.2கிலோ எடைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.38,990-ஆக உள்ளது.