#BREAKING : திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த மகப்பேறு சிகிச்சை மையத்தில், மகப்பேறு மருத்துவத்திற்கு 200 படுக்கைகளும், சிசு தீவிர சிகிச்சைக்கு 50 படுக்கைகளும் மொத்தமாக 250 படுக்கைகள் உள்ளது.