நட்சத்திர தம்பதி சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி வாழ்த்து..!

Default Image

தமிழ் திரையுலக பிரபல நடிகை மற்றும் நடிகரான சரண்யா-பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் தாய் கதாபாத்திரத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பில் முன்னணியில் இருக்கிறார் சரண்யா. இவரது கணவர் பொன்வண்ணனும் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர் பிரியதர்ஷினி, சாந்தினி. இதில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் விக்னேஷ் என்பவருடன் நிச்சயம் செய்துள்ளனர்.

இன்று இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின் வரவேற்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு புது மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும், மணமக்களுக்கு பரிசாக மரக்கன்றுகள் இருக்கும் பசுமைக்கூடையை முதல்வர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
Gujarat Titans
thol thirumavalavan about bjp
ponmudi dmk
Lucknow Super Giants have won the toss
sneak her into boys hostel
Premalatha - Vijayakanth