டி.என்.பி.எல். ஆலை மீது குற்றச்சாட்டு!காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட நீரின் போக்கை திருப்பி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு!
டி.என்.பி.எல். ஆலை , கரூரில் காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட நீரின் போக்கை திருப்பி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு சொந்தமான காகித ஆலை உள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், டி.என்.பி.எல். ஆலை நிர்வாகம் தற்காலிக கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே குடிநீர்தேவைக்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், காகித ஆலையின் நீரேற்று நிலையத்திற்கு வருமாறு திசை திருப்பப்பட்டு உறிஞ்சப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடும் வறட்சி நிலவும் போது குடிநீருக்கான தண்ணீரை ஆலை நிர்வாகம் எடுக்கக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் இரவு பகலாக உறிஞ்சப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.