இனி சமூக வலைத்தளங்களில் இது போன்று பதிவிட்டால் உடனடி கைது!
இனிமேல் சமூக வலைத்தளங்களில் பெண்களை தவறாக சித்தரித்தல் மற்றும் சாதிய மோதல்களை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக கருத்து பதிவிடுபவர்களை கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை ஆபாசமாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு கருத்து பதிவிட்டு வரக்கூடிய 16 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதும் சமூக வலைதளங்களில் சாதிய மோதலை உண்டாக்கும் வகையிலோ, பெண்களை இழிவாக சித்தரித்தோ அல்லது அரசியல் கட்சியினரை அவதூறாக சித்தரித்தோ கருத்துக்கள் அல்லது வீடியோ பதிவிட்டால் அந்த நபர்கள் இனி உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.