“ரேவதி வீரமணி” ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் – எல்.முருகன் ட்வீட்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மதுரையை சேர்ந்த ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல் முருகன்.
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 26 வீரர் – வீராங்கனைகள் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இந்த 11 பேரில் இன்று மட்டும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப்பிரிவில் ரேவதி வீரமணி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள்.
ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள ரேவதி வீரமணி 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த 22 வயதான ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். 12ம் வகுப்பு படித்தபோது ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார்.ரேவதியின் திறமையை பார்த்த பயிற்சியாளர் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தியுள்ளனர்.
பின்னர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடப்படுகிறது. தற்போது ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 4ம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதித்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்கு தேர்வானார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் களம் காண உள்ள ரேவதிக்கு பாஜக மாநில தலைவர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருக்கும் சிங்கபெண்ணே, கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் மதுரையை சேர்ந்த “ரேவதி வீரமணி” ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருக்கும் சிங்கபெண்ணே!!
கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் மதுரையை சேர்ந்த “ரேவதி வீரமணி” ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!@narendramodi @JPNadda @blsanthosh @CTRavi_BJP @KirenRijiju@Olympics #Olympics2021 #Revathi pic.twitter.com/QhGaOpdca0
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 6, 2021