கார் மற்றும் பைக் மோதல்…! இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கர்நாடக துணை முதல்வர் மகன் சிதானந்த் சவாடியின் கார்…!
கர்நாடக துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவாடியின் மூத்த மகனின் கார் மீது தனது இரு சக்கர வாகனம் மோதியதில் 58 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கர்நாடக துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவாடியின் மூத்த மகனின் கார் மீது தனது இரு சக்கர வாகனம் மோதியதில் 58 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாகல்கோட் தாலுகாவின் சிக்காஹண்டகல் கிராமத்தில் வசிக்கும் விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து, ஹங்குண்ட் நகரத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்துள்ளது.
சிதானந்த் சவாடி மற்றும் பதினொரு பேர் விஜயபுரா வழியாக அதானிக்கு இரண்டு கார்களில் திரும்பி வந்தனர். விவசாயி தனது விவசாய நிலத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த விவசாயி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இதுதொடர்பாக ஹுனகுண்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிதானந்திற்கு பதிலாக டிரைவர் ஹனுமந்த் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிதானந்த் தனது வாகன நம்பர் பிளேட்டை சேதப்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டினர் இருப்பினும், போலீசார் வரும் வரை மக்கள் அவரை தப்பிக்க அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிதானந்த், விபத்தை ஏற்படுத்திய கார் எனக்கு சொந்தமானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது எனது ஓட்டுநரால் இயக்கப்பட்டது. எனது காரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் இருந்த மற்றொரு காரில் நான் எனது நண்பர்களுடன் இருந்தேன். இந்த சம்பவம் குறித்து எனக்கு எச்சரிக்கை வந்தவுடன், நான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 58 வயதான நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினேன். நான் எந்தவொரு நபரையும் அச்சுறுத்தவில்லை அல்லது விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் நான் இறந்த குடும்பத்திற்கும் உதவுவேன் என தெரிவித்துள்ளார்.