அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே..!
அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெப் பெஸோஸ் ஜூலை 5 ஆம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து இந்த பதவிக்கு அந்நிறுவனத்தின் இணையவழி சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெப் பெஸோஸ் 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கி அதனை முன்னணி ஆன்லைன் வர்த்தகமாக மாற்றி 27 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ப்ளூ ஒரிஜினல் என்ற செயற்கைக்கோள் தயாரிப்பதில் கவனம் செலுத்த உள்ளார். அதன் காரணமாக தற்போது அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.