முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாணையில், நடிகை சம்மத்துடன் தான் கருகலைப்பு செய்யப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன், எங்கும் தப்பி செல்லவில்லை என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் என்னை கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்தார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழித்து விடுவார் என துணை நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.