குட்டையா இருக்கிறோமேனு கவலைப்படாதீங்க….! உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்…!

Default Image

உயரமாக வளர வேண்டும் என விரும்புபவர்கள் கீழ்கண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

இன்று அதிகமானோர் தங்கள்  உயரத்தை குறித்து கவலைப்படுவதுண்டு. ஒருவரின் உடல் தோற்றத்திற்கேற்றவாறு, அவர்களது உயரம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். உடற்பயிற்சி மற்றும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைப் உட்கொள்வது நாம் உயரமாக வளர உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பொதுவாக ஒரு நபரின் உயரம் 18 வயது முதல் 20 வயது வரை அதிகரிக்கும். அந்த வயதிற்குப் பிறகு, வளர்ச்சி கிட்டத்தட்ட மிகக் குறைவு. இதன் விளைவாக ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பது மிக முக்கியமானது. உயரமாக வளர கீழ்கண்ட 5 உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பீன்ஸ்

காய்கறிகளில் பீன்ஸ் அதிகமான புரதசத்துக்களை கொண்ட காய்கறியாகும். எனவே இந்த பீன்ஸை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொண்டால், இது நாம் உயரமாக வளர வழிவகுக்கும்.

சிக்கன்

chickentikkamasalaநம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை அனைவருமே சிக்கன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த சிக்கனில் அதிக அளவில் புரத சத்து காணப்படுகிறது. நாம் அதிகமாக சிக்கன் கறியை உட்கொண்டால், அது நமது வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

முட்டை

egg food 1உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், முட்டை மிகவும் சத்துள்ள உணவாகும். அந்தவகையில், முட்டையில் புரதசத்து அதிகமாக காணப்படுகிறது.  இது நமது உயரத்தை அதிகரிக்க உதவுவதோடு, எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

பால்

பாலில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இது, நமது உயரத்தை அதிகரிக்க உதவுவதோடு, எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடலின் பொது வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பாதாம்

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் அடிக்கடி பாதாமை உட்கொள்வது நல்லது. இது நமது உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்