கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி..!
கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து இன்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த வாரம் பொதுமக்களிடம் இருந்து 4 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை பெற்றுள்ளதாகவும் அவை துறை ரீதியாக அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
முதியோர் உதவித்தொகை வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும். மேலும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.