இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சதமடித்தும் நிற்கவில்லை !
சென்னையில் ரூ .100 ஐ தாண்டியும் நிற்காமல் உயரும் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ .100.44 க்கும் டீசல் ரூ .93.91 க்கும் விற்பனை
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. சென்னையில் வரலாற்றில் முதன்முதலில் நேற்று பெட்ரோல் ரூ.100 ஐ கடந்து விற்பனையானது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 0.31 காசுகள் உயர்ந்து ரூ .100.44 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.19 காசுகள் உயர்ந்து ரூ .93.91 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் குறிக்கும் விலைகள் பற்றி தெரிந்துகொள்ள
உங்கள் நகரம் / நகரத்தில் எரிபொருளின் விலைகளை (பெட்ரோல் / டீசல்) தெரிந்துகொள்ள நீங்கள் “RSP <space>Dealer Code of Petrol Pump” என்று மெசேஜ் டைப் செய்து 92249 92249 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, எஸ்.எம்.எஸ். டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு “RSP 102072” to 92249 92249 வரை ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து IOCL டீலர் குறியீடுகளைப் பெறலாம்.