பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.!
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சற்று நேரத்தில் சந்திக்கின்றனர்.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சற்று நேரத்தில் சந்திக்கின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், தற்போது தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.