ராகுல்காந்திக்கு என்னதான் பிரச்சனை…? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ராகுல் காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை வந்துவிட்டது. தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி?’ என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்னதான் பிரச்சனை? அந்தத் தரவுகளை அவர் படிக்கவில்லையா? அவருக்கு புரியவில்லையா? ஆணவத்திற்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.
Just yesterday, I put out facts on vaccine availability for the month of July.
What is @RahulGandhi Ji’s problem ?Does he not read ?
Does he not understand ?There is no vaccine for the virus of arrogance and ignorance !!@INCIndia must think of a leadership overhaul ! https://t.co/jFX60jM15w
— Dr Harsh Vardhan (@drharshvardhan) July 2, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025