கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 10% பேருக்கு செப்டம்பருக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்-உலக சுகாதார அமைப்பு..!
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதில் பல ஏற்றத்தாழ்வு இருப்பதாக தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், ஏழை நாடுகளில் தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், சில நாடுகளில் தடுப்பூசி திட்டத்தை தொடங்காமல் இருக்கின்றனர். இதனால் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் அவர்களது நாட்டின் மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் தான் சிறிதளவு பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டார்.