எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? – கமலஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை சமீப நாட்களாக அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் சமையல் எரிவாயுவின் விலை, சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்து, தற்போது ரூ.850-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த விலை உயர்வை கண்டித்து, டிடிவி தினகரன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?’ என பதிவிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?
— Kamal Haasan (@ikamalhaasan) July 2, 2021