டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் புலம்பெயர்வு..!
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமையன்று ரயில்த்துறை அமைச்சகம் குறிப்பிட்ட தரவுகளை நாடாளுமன்ற உள்துறையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, இரண்டாம் அலையின் பொழுது கிட்டத்தட்ட 517,073 பேர் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கு ரயில்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இரண்டாம் கொரோனா அலை வேகமாக பரவி பல மக்கள் உயிரிழந்து வந்தனர்.
தொற்று பரவும் வீதமும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்ததால் தகன மேடைகள் நிரம்பி வழிய தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாத மத்தியில் டெல்லியில் ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாவது, இரண்டாம் அலையின் போது டெல்லியை விட்டு 13 லட்ச தொழிலார்கள் புலம்பெயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
கடந்த மாதம் டெல்லி அரசு, ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் சுமார் 8,00,000 பேர் மற்ற மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக கூறியது. இதனால் இரண்டாம் கொரோனா அலையால் மொத்தமாக டெல்லியை விட்டு 13 லட்ச மக்கள் மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.