தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும்…! மருத்துவத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக முதலமைச்சராக பதவியேற்றது முதல் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதோடு, இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில், தொற்று பரவலை தடுக்கவும், மக்கள் சிகிச்சை பெறவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், தற்போது, தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.