இந்திய வீரர்கள் 4 ஓவர்களில் சோர்ந்து போய் விடுகிறார்கள்- கபில்தேவ்..!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியது ” இன்றயை கால கிரிக்கெட்டில், பேட்டிங் அல்லது, பந்துவீசினால் போதும், எங்களுடைய காலத்தில் எல்லாவற்றையும் செய்யவேண்டும் ஆனால் எங்கள் காலத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இன்று கிரிக்கெட் நிறையவே மாறியிருக்கிறது. வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர். அவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் காலத்தில் இருந்த வீரர்கள் எப்படி விளையாடினாலும் குறைந்து 10 ஓவர்கள் பந்து வீசினர்.
இதனை வலைப்பயிற்சின் போது பேட்டிங் பயிற்சி செய்வார்கள். பேட்டிங் செய்பவர்களுக்கு 10 ஓவர் நங்கள் பந்துவீசுவோம், அதிக வலைப்பயிற்சி உங்களை வலுவானதாக மாற்றும். பல வீரர்கள் வலைப்பயிற்சியில் பந்து வீச ஆர்வம் காட்டுவது இல்லை. நான் இதை சரி தவறு என்று கூறவில்லை, ஆனால் எங்கள் தலைமுறையினருக்கு இது மிகவும் வித்தியசமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.