78 வயதான முதியவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!

Default Image

78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்க்கோ நகரில் முதியவர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 78 வயதான மைக் யாகர் என்பவர் கீழே விழுந்து மூக்கில் பலமாக அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆப்பிள் வாட்ச்சிற்கு பதிலளிக்காததால் உடனடியாக ஆப்பிள் வாட்ச் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்துள்ளது. சம்மர்பீல்டு தீயணைப்பு துறையால் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் பிறகு, மைக் யாகர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். நான் இங்கு விழுந்து இருந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? என்று, இதற்கு அவர்கள் உங்க ஆப்பிள் வாட்ச் தெரிவித்தது என்று கூறியுள்ளனர்.  மேலும், இந்த ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கை செய்தி பதிவை குறித்து மைக் யாகாரின் மனைவி லோரி யாகர், நான் பேச்சில்லாமல் இருந்தேன். என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. நான் இன்னும் இரண்டு மணி நேரம் வீட்டிற்கு வரவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்று யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்பிள் வாட்சில் வீழ்ச்சியடைவதை கண்டறியும் திறன் உள்ளது. இது மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும், 65 வயதிற்கு மேம்பட்டவர்களுக்கு இது நல்லமதிப்புடையாக இருக்கும். ஏதாவது இந்த வயதில் செய்யவேண்டும் என்று நினைத்தால் இந்த கடிகாரத்தை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்