வறண்ட சருமம் உள்ளவர்களா நீங்கள்? கடலை மாவை இப்படி உபயோகிக்காதீர்கள்!
உபயோகிக்கும் முறை
வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்வதால் விரைவில் முக சுருக்கங்களை ஏற்பட்டு முக அழகு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போ வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை எப்படி உபயோகிப்பது என்று கேட்டால் கடலை மாவு மற்றும் தக்காளி, தயி,ர் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல கலந்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் கடலை மாவில் தண்ணீர் சேர்க்காமல் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கும். உங்கள் சருமத்திற்கு கடலை மாவால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தான் இப்படி செய்ய வேண்டுமா? என்று கேட்டால் இல்லை. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே கடலை மாவில் இதுபோன்று தேன் அல்லது தக்காளியை சேர்த்து உபயோகிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கடலை மாவில் தண்ணீர் கலந்து உபயோகித்தால் கூட முகத்திலுள்ள எண்ணெய் பசை நீங்கும்.