உயிர் காக்கும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – விஜயகாந்த்!
தமிழகத்தின் புதிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வருடம் தோறும் ஜூலை 1-ஆம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ தினமாக அனுசரிக்கப்படும் இன்று பல அரசியல் தலைவர்கள் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரக்கூடிய மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருவதாகவு,ம் அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றாலும், தற்போதுள்ள புதிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே தற்போதுள்ள புதிய அரசாவது மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.(1-2)
— Vijayakant (@iVijayakant) July 1, 2021
கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு @CMOTamilnadu நடவடிக்கை எடுக்க வேண்டும். (2-2) pic.twitter.com/eJUiAm7Hcw
— Vijayakant (@iVijayakant) July 1, 2021