ஆன்லைன் விளையாட்டு.., அரசுகள் தான் தடுக்க முடியும்- ஐகோர்ட்..!
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்கமுடியும் என ஐகோர்ட்தெரிவித்தது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்யவும், ஆய்வுசெய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வர கோரி மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்போர் விளையாட்டுக்களுக்கு அடிமை ஆகின்றனர் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அதிக அளவு செல்போன், கணினி பயன்படுத்துவோர் கோபமனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாகின்றனர். செல்போன், கணினி பயன்படுத்துவோர் பெற்றோர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்கமுடியும் என தெரிவித்தார்.
மேலும், 4 வாரங்களில் மத்திய மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.