ஒன்றிய அரசு என்று கூற தடை விதிக்க முடியாது- மதுரை கிளை அதிரடி..!
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்லை சார்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். அதில், சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக ஆட்சி அமைத்த பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறார்கள்.
இந்திய அரசை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் கூறவேண்டும். இவர்கள் கூறுவது போல ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, இதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் குறிப்பிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு, தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களே இப்படி தான் பேசவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க உத்தரவிட முடியாது. அது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட உரிமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.