கொரோனா நலவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் மற்றும் பன்னநாட்டு தடுப்பூசி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்கா நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி போடவேண்டும்.
அதற்கான தடுப்பூசி மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.