1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்…!
இடுகாட்டுக்கோட்டை ஹுண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஸ்ரீபெரும்புத்தூர் ஹுண்டாய் தொழிற்சாலையில் கார்கள் தயாரிப்பு 1 கோடியை எட்டியது. ஒரு கோடி கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹுண்டாய் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
ஹுண்டாய் தொழிற்சாலை 1998 இல் திமுக ஆட்சியின்போது இடுகாட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.