எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறைவு – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பு குறித்து பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா வைரஸ் பரவல் மிக குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ துறையின் இணை பேராசிரியர் நீரஜ் நிஷால் அவர்கள், ஐம் நோயாளிகளை கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருப்பதாகவும், அதற்க்கு காரணம் அவர்கள் ஏற்கனவே தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கும் சக்திகளை கொண்டுள்ளதுடன் அவர்கள் அதிகப்படியான முன்னெச்சரிக்கைகளையும் கையாண்டிருப்பார்கள் என்பது தான் என அவர் தெரிவித்துள்ளார்.