திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் எனும் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்த சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கச்சாஎண்ணெய் அதிக அளவில் வெளியேறி நிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த ஓஎன்ஜிசி குழாய் நேற்று இரவே உடைந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாகதான் வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள், தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சில அதிகாரிகள் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும், எண்ணெய் குழாய் உடைப்பை சரி செய்ய முக்கியமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிப்படைந்த விவசாயின் நிலம் சுத்தம் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.