தமிழகத்தின் 30 வது சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபி யாக சைலேந்திரபாபு நியமனம்..!

Default Image

தமிழக டிஜிபி திரிபாதி வரும் 30-ம் தேதி  நாளையுடன் ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபி யாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதி நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் கடந்த 28-ம் தேதி ஆலோசனை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால்,தமிழக டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மாநில அரசுக்கு பரிந்துறை செய்தது.

இந்த பட்டியலில்  1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான  ரயில்வே துறை டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வரும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளையுடன் தமிழக டிஜிபி திரிபாதி ஓய்வு பெறயிருக்கும் நிலையில் தமிழகத்தின் 30 வது சட்டம் & ஒழுங்கு டிஜிபி யாக தமிழகத்தை சேர்ந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பொறுப்பேற்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்