முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்…!
சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர். சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுத்ததால், புழலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.